Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 டிசெம்பர் 12 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாகச் சென்ற தான், கடந்த இரண்டு வருடங்களாக ஒரே வீட்டிலே பணிப்புரிந்ததாகவும், ஆனால், நாடு திரும்பும்போது வெறுங்கையோடே திரும்பியனுப்பப்பட்டதாகவும் மஸ்கெலியா, கிலன்டில் தோட்டத்தைச் சேர்ந்த, சுப்ரமணியம் புஸ்பலீலா (40 வயது) என்ற பெண் தெரிவித்துள்ளார்.
எனவே, தான் பணிப்புரிந்த காலப்பகுதிக்கான கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு, அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான இவர், குடும்ப வறுமைக் காரணமாக 2014ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக குடும்ப உறவினர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாதளவில் தான், வீட்டுரிமையாளர்களினால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
இவர், சவூதிக்குச் சென்ற 8 மாத்திலேயே, இவரது கணவரும் மரணமடைந்துள்ளார். அந்தத் தகவலைக்கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில் அவர், குடும்ப உறவினர்களிடம் தொடர்பற்று இருந்ததாக தெரியவருகிறது.
இவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லாததனால், இவரது உறவினர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யதுள்ளனர். முறைப்பாட்டின் பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அப் பெண் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இரண்டு வருடங்களுக்குறிய எவ்வித கொடுப்பனவையும் வழங்காமலே தான் திருப்பியனுப்பப்பட்டதாக கூறியுள்ள அவர், பணிப்புரிந்த வீட்டிலிருந்து கொடுப்பனவைப் பெற்றுகொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
33 minute ago
38 minute ago