Kogilavani / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
ஹட்டன் நகர பிரதான வீதியின் ஒரு பகுதி, மிக நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்பட்டதால், அவ்வீதி வழியாகப் போக்குவரத்துச் செய்வதில் பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே இந்த வீதியைப் புனரமைத்துத் தருமாறு, நகர வர்த்தகர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, வீதியின் புனரமைப்புப் பணிகள், நேற்று (12) முன்னெடுக்கப்பட்டது.
குன்றும் குழியுமாகக் காணப்பட்ட வீதியின் ஒரு பகுதி, தார் இட்டு மூடப்பட்டதாக, ஹட்டன் - டிக்கோயா நகரசபைத் தலைவர் சடையன் பாலேந்திரன் தெரிவித்தார்.
13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026