2021 மே 06, வியாழக்கிழமை

ஹட்டனுக்கு கபாலி வராததால் இரசிகர்கள் அதிருப்தி

Niroshini   / 2016 ஜூலை 22 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தலைநகர் உட்பட பல திரையரங்குகளில் இன்று திரையிடப்பட்டுள்ள கபாலி திரைப்படம் ஹட்டன் திரையறங்கில் திரையிடப்படிமையினால் ரஜினி இரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

 

எதிர்பார்புகளுடன் தயாராகிய இரசிகர் கூட்டத்துக்கு ஏமாற்றத்தை தந்த கபாலியால் ஹட்டன் நகரிலுள்ள திரையரங்கு அதிகாரிகளுடன்  ரஜினி  இரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கபாலி திரைப்படத்தை திரையிடாப்படாமை தொடர்பில் ஹட்டன் நகரிலுள்ள திரையரங்கு அதிகாரிகளிடம் கேட்டபோது, வியாபார போட்டியால் கபாலி திரைப்பட பிரதி எமக்கு கிடைக்கவில்லை இதுபோல கண்டி- கட்டுகஸ்தோட்டை, கம்பளை திரையரங்குகளுக்கும் கபாலி படகாட்சி பிரதி  கிடைக்கவில்லையெனவும் இதனால் மலையகத்தில் தமிழ் திரைப்பட இரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளதாகவும் ஹட்டன் திரையாரங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .