Niroshini / 2016 மார்ச் 04 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக் ஷ, மு.இராமசந்திரன்,ஆ.ரமேஸ்
அகில இலங்கை தோட்டதொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், தொழிற்சங்கங்களுக்கும் தோட்டக் கம்பனிகளுக்குமிடையிலான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்குமாறுக்கோரி ஹட்டன் பஸ் நிலைய சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கூட்டு ஒப்பந்தமானது நிறைவு பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் நடைபெற்ற சம்பளவுயர்வு பேச்சுவார்த்தை இதுவரையில் தீர்வு காணாமல் இழுபறியாகக் காணப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியிலுள்ள தொழிலாளர்களின் நலன் கருதி பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்கக்கோரியே இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் தேசிய தொழிற்சங்கத்தின் மத்திய நிலையத்தின் தலைவர் கே.டீ. லால்காந்த கலந்துகொண்டார்.

1 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025