பாலித ஆரியவன்ச / 2017 மே 30 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை நகர், மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில், ஹெரோய்னுடன் 30 வயதான நபரை, இன்றுக் காலை கைதுசெய்துள்ள பதுளை பொலிஸார், அவரிடமிருந்து 50 மில்லிகிராம் ஹெரோய்னையும் கைப்பற்றியுள்ளனர்.
பதுளை, கல்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபர், ஹெரோய்ன் வைத்திருந்த குற்றத்துக்காக, ஏற்கெனவே நீதிமன்றத்தினால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர் என, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025