2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

ஹெரோய்ன் வியாபாரி உட்பட இருவர் கைது

Sudharshini   / 2016 மார்ச் 16 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை, உக்குரஸ்ஸபிட்டிய பிரதேசத்தில் 50 மில்லிகிராம்; ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த வியாபாரி ஒருவரையும் அவரிடம் போதைப்பொருள் கொள்வனவு செய்த இரண்டு சந்தேக நபர்களையும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (15) கைதுசெய்துள்ளனர்.

மேற்படி நபர், அலைபேசி மூலம் பணப் பரிமாற்றம் (eZ-cash) செய்து, ஹெரொய்ன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்போது, போதைப்பொருளைக் கொள்வனவு செய்தவர்களிடமிருந்து தலா 40 மில்லிகிராம் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி வியாபாரியையும் அவரிடமிருந்து ஹெரோய்ன் கொள்வனவு செய்த இருவரையுமே இவ்வாறு கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--