2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

அக்குறணையில் 08 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை

Kogilavani   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை குருகொடை பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து சுமார் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள தங்க நகைகளை நேற்று முன்தினம் சனிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக அலவத்துகொடை பொலிஸில் முறைப்பாடு செயயப்பட்டுள்ளது.

வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் வீட்டின் ஜன்னல் ஒன்றினை உடைத்து அதன் வழியாக கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கொள்ளைச்  சம்பவம் தொடர்பாக அலவத்துகொடை பொலிஸாரிடம் கேட்டபோது , இது  தொடர்பான  மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .