2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

அக்குறணை வெள்ளத்தினால் 15 கோடி ரூபா நஷ்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

alt

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக 15 கோடி ரூபாவுக்கு அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அக்குறணை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.

நேற்று மாலை 5 மணி முதல் பெய்த கடும் மழை காரணமாக சுமார் மூன்று மணி நேரம் அக்குறணை நகரம் வெள்ளத்தால் மூழ்கி இருந்தது.

அக்குறணை நகரத்தில் மாத்தளை வீதி,  துனுவில வீதி, 7ம் கட்டை உட்பட மூன்று கிலோமீற்றர் தூரம் வரையுள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகள் நீரில் மூழ்கி பொருட்கள் ஆவணங்கள் அழிந்துள்ளன.

அதனால் ஏற்பட்டுள்ள நஷ்டம் 15 கோடி ரூபாவுக்கும் அதிகம் என அக்குறணை வர்த்தக சங்கத்தினர் தமிழ்மிரரு தெரிவித்தனர்.

இதைத்தவிர பிரதேசத்தில் 50இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வீதிகளில் கற்கள் மரங்கள் விழ்ந்திருப்பதன் காராணமாக போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

நகரையும் பாதைகளையும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

alt

alt
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--