2021 ஜனவரி 23, சனிக்கிழமை

ஹட்டன் பஸ் விபத்தில் 17 பேர் காயம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தலவாக்கலை- ஹட்டன் பிரதான வீதியில் குடாகம பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் பெண்கள் ஐவர் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 17 பேரும் டிக்கோயா-கிளங்கன் ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலையிலிருந்த காலை 7.30 மனியளவில் பயணிகளை ஏற்றிக்கொன்டு ஹட்டன் நோக்கி வந்த ஹட்டன் சாலைக்கு செந்தமான இ.போ.ச பஸ் தனியார் பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே  மதிலொன்றின்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .