2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மேலும் 200 மாணவர்கள் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, நுகவெல ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த 200 மாணவர்கள் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடர் அரிப்பு, மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட இம்மாணவர்கள், கட்டுகஸ்தொட மற்றும் தித்தபஜ்ஜல வைத்தியசாலைகளிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலங்கொடை வெலிகேபொல ஆரம்ப பாடசாலை, கம்பளை, பன்விலதன்ன வித்தியாலய மற்றும் கம்பளை ஜினராஜ கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களும் கடந்த இரு தினங்களாக ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X