2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

2,000 தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: அதிகாரிகளும் பூட்டிவைப்பு

Super User   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சீ.எம்.ரீஃபாத்

அரச பெருந்தோட்ட துறை யாக்கத்திற்கு சொந்தமான மடுல்கல, கலாபொக்க தோட்ட தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து சுமார் 2,000 தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் தோட்ட அதிகாரிகளையும் அறையில் பூட்டிவைத்துள்ளனர்.

கடந்த எட்டாம் திகதி வழங்கப்பட வேண்டிய மாத சம்பவம் இதுவரை வழங்கப்பட்டவில்லை என தெரிவித்தே இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தோட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களை அலுலக அறையில் பூட்டிவைத்துள்ளமையால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமக்குரிய மாத சம்பளம் வழங்கப்படும் வரை இவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டமாட்டார்கள் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஆகல, கோமர மற்றும் அலகொல ஆகிய தோட்ட பிரிவுகளிலுள்ள தொழிலாளர்களும் மாத சம்பளம் வழங்காமையினால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாத சம்பளம் வழங்காமையினால் தங்களின் அன்றாட வாழ்க்கையின் கொண்டு செல்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0

  • aj Tuesday, 12 February 2013 07:52 AM

    இந்த மக்களுக்கு ஒரு தீர்வு இல்லை.. மக்களே தான் திருந்தவேண்டும். இவர்களை நம்பி பயன் இல்லை. போராட்டம் இல்லாமல் எதுமே கிடைக்காது. ஒரு குடையின் இணைந்து மக்கள் போராட்டம் செய்தால் தீர்வு கிடைக்கும். அரசியலுக்கு அப்பால் சமுகத்துக்காக அரசியல் தலைமைகள் ஒன்று சேரவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X