2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டனில் மனித அபிவிருத்தி செயற்திட்ட வலுவூட்டல் பயிற்சிநெறி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கண்டி செட்டிக் நிறுவனம் நடத்திவரும் ஒன்றிணைந்த மனித அபிவிருத்தி செயற்றிட்டத்தில் ஹட்டன், நுவரெலியா பிராந்தியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்களுக்கான வலுவூட்டல் பயிற்சிநெறி ஒன்று ஹட்டனில் நடத்தப்பட்டது.

இதில் கரிட்டாஸ் நிறுவன பயிற்றுவிப்பாளர் சியோன் டி அல்விஸ், கரிட்டாஸ் கண்டி பிரதேச வேலைத்திட்ட பொறுப்பதிகாரி விதாரண, நுவரெலியா பிரதேச பணியாளர்கள் அ.அருள் நேசராஜா, சி.நிவேதனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு ஹட்டன் ,நுவரெலியா ஆகிய பிராந்தியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டப்பணியாளர்கள் 30பேர் பங்கேற்றனர். இச்செயற்திட்டமானது கண்டி செட்டிக் நிறுவனத்தினால், மத்திய மாகாணத்தில் 3 மாவட்டங்களிலும் தோட்டங்களிலும் கிராமங்களிலும் அமுல்படுத்தப்படுகிறது.

இந்தச் செயற்றிட்டத்தின் மூலமாக தோட்டப்பகுதி மக்களிடத்தில் சமூக அபிவிருத்தித் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--