2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

எசல பெரஹராவை பார்வையிடுவதற்கு இலட்சக்கணக்கான மக்கள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவை  பெரஹராவைப் பார்வையிட நேற்று இலட்சக்கனக்காக  மக்கள் வந்திருந்தனர். இந்நிலையில், பல இலட்சம் மக்கள் ஒரே நேரத்தில் கண்டி நகர வீதிகளில் வந்து குவிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வாகனங்களையும் பொது மக்களையும் கட்டுப் படுத்துவதில் பொலிஸார் பெரும் சிரமங்களை எதிர் கொண்டதையும்  அவதானிக்க முடிந்தது.

இன்று 24 போயா விடுமுறையுடன் இறுதி இரவு பெரஹராவாகவும் இருப்பதனால் சன நெரிசல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதேநேரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சம்பிரதாய முறைப்படி இறுதிப் பெரஹராவை நேரடியாகப் பார்வையிடவுள்ளார். அத்துடன் கண்டி நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளதையும் ஆங்காங்கே கலாசார மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருவதையும் காண முடிகிறது. சிட்டி டிரேட் சென்டர் மேல் மாடியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இதை விட கண்டி நகருக்கு கொழும்புப் பக்கமிருந்துவரும் போது எதிர்கொள்ளும் நுழைவாயிலான கெட்டம்பே மைதானத்தில் ஒரு களியாட்டமும், மாத்தளைப் பக்கமாக இருந்து வரும்போது போது எதிர்கொள்ளும் நுழையும் வாயிலான கட்டுகாஸ்தோட்டை ஸ்ரீ  ராகுலா மைதானத்தில் ஒரு களியாட்டமும் நடைபெறுகின்றன. இதைவிட நகர வீதிகள் எங்கும் மின் அலங்காரமும் பௌத்த  கொடிகளும் பரவலாக காணப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X