2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

தமிழ் மொழியிலும் பிரசுரங்களை வெளியிடுமாறு பிரதேசசபை உறுப்பினர் கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேசசபை பிரிவிற்குள் மக்களை அறிவுறுத்தும் துண்டுப்பிரசுரங்களும் அறிவித்தல்களும் தமிழ் மொழியிலும் மொழி பெயர்த்து வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டுமென அக்குறணை பிரதேசசபையின் ஐ.தே.க. உறுப்பினர் ராமய்யா ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்குறணை பிரதேசசபையின் மாதாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அக்குறணை பிரதேசம் தமிழ் மொழியை பேசும் மக்கள் பரவலாக வாழும் பிரதேசமாகும் எனவும் இப்பிரதேசத்தில் விநியோகிக்கும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் அறிவித்தல்கள் தமிழ் மொழி மூலம் கிடைக்காமை பெரும் குறையாகும் எனவும் கூறிய அவர், இதன் பின் அனைத்து துண்டுப்பிரசுரங்களும் தமிழ் மொழி மூலமும் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--