2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ஹேவாஹெட்ட ருக்குட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹேவாஹெட்ட  ருக்குட் இரண்டாமிலக்க தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியும் திருவோண நட்சத்திரமும் கூடிய மு.ப 9.00 மணிமுதல் 11.58 மணிவரை சுபமுகூர்த்த வேளையில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு கிரியாகால நிகழ்வு நேற்று 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

இன்று சனிக்கிழமையன்று காலை 10.00 மணியளவில் நவாக்கினி ஹோமம், தீபாராதனை, கங்கையில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து என்பனவற்றைத் தொடர்ந்து எண்ணைக்காப்பு சாத்துதல் இரவு 7.00 மணி வரை நடைபெறும். நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து 10.00 மணிமுதல் 11.58 மணிக்குள் ஸ்தூபி அபிஷேகமும், 12.00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கும்பாபிஷேக கிரியைகள் யாவும் ஹட்டன் தரவளை மேல்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரம்ம ஸ்ரீ ச. சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமையில் நடைபெறும்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--