Freelancer / 2026 ஜனவரி 07 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா மீது, அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை.
இந்த சம்பவத்தில் வெனிசுலாவின் ராணுவ வீரர்கள் 23 பேரும், க்யூபாவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 32 பேரும் கொல்லப்பட்டனர். அதோடு, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அந்நாட்டில் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்காகவே வெனிசுலா மீது ட்ரம்ப் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், போதைப்பொருளை தடுக்கவும், உலகின் அமைதிக்காகவும் மட்டுமே ராணுவ நடவடிக்கையை எடுத்ததாக அமெரிக்கா விளக்கமளித்தது. ஆனால், தற்போது வெனிசுலா அரசாங்கம் அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய வேண்டும் என ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“50 மில்லியன் கச்சா எண்ணெய் பேரல்களை அமெரிக்காவிற்கு வெனிசுலா அனுப்பும். இந்த எண்ணெய் சந்தை விலையில் கொள்முதல் செய்யப்படு, அந்தப் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அமெரிக்காவின் ஜனாதிபதியாக என்னால் கட்டுப்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட்டை வலியுறுத்தியுள்ளேன். இது சேமிப்புக் கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, அமெரிக்காவில் உள்ள இறக்கும் கப்பல்துறைகளுக்கு நேரடியாகக் கொண்டு வரப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் குற்றச்சாட்டுகள் உண்மை தானோ என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. R
38 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago