2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

அஸ்கிரிய மைதானத்திற்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Super User   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எஸ்.குவால்தீன்)

கண்டி அஸ்கிரிய விளையாட்டு மைதானத்திற்கு அண்மையிலுள்ள சந்தியிலிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.

நடுத்தர வயதுமதிக்கத்தக்க மேற்படி நபரின் சடலம் தற்போது கண்டி வைத்தியசாலை பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளது.

இந்நபர் கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்தினால் இறந்தாரா என்பதை கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .