2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

காதலி மீது பெற்றோல் ஊற்றி தீ வைக்க முயற்சித்த காதலன் கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

எட்டு வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு திரும்பிய காதலன், தனது காதலி மீது பெற்றோல் ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இடம்பெற்றுள்ளது.

தனது காதலியை திருமணம் செய்து நல்லதொரு வாழ்க்கையை நடத்துவதற்காக வெளிநாடு சென்றுள்ள இவ்விளைஞன் எட்டு வருடங்கள் கடந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் தனது காதலி, வேறு ஒரு இளைஞனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயை அவர் தன் காதலியை பெற்றொல் ஊற்றி தீவைக்க முற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 28 வயதுடைய காதலனை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--