2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எவ்.எம்.தாஹீர்)

மொனராகலை தனமல்வில பொலிஸ் நிலைய காவல் அரண் ஒன்றில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இன்னுமொருவரின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே துப்பாக்கி பிரயோகம் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டு உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தனமல்வில பொலிஸில் சேவை செய்த அரங்க பிரதீபரட்ன என்பவர் ஆவர். இந்த சம்பவம் இன்று  பகல்  தனமல்வில பொலிஸ் நிலைய காவல் அரணில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டபோது கடமையில் இருக்கவில்லை. அந்தக் காவல் அரணில் அவரது நண்பர் ஒருவர் கடமையிலிருந்துள்ளார். அதன்போது அங்கு வந்த மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது குறித்த காவல் அரணில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரது துப்பாக்கியை அங்கு வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்போதே அந்த துப்பாக்கியை எடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னைத் தானே துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டவரை பொலிஸார் அவசரமாக தனமல்வில வைத்தியசாலையில் அனுமதித்தப்போது அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தற்கொலைக்கு காதல் விவகாரமே காரணமாக இருக்கலாம் என பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மொனராகலை பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கபில ஜயசேகரவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--