2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கண்டியில் கடத்தப்பட்ட மாணவன் ஹோமாகமவில் தப்பினான்

Super User   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                          (மொஹொமட் ஆஸிக்)

கண்டி வத்துகாமம் பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்ட மாணவன் ஒருவன் ஹோமகமவில் வைத்த தப்பித்த சம்பவம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.

கண்டியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11யில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இன்நிலைக்கு ஆளாகியுள்ளான்.

குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் காலை பாடசாலைக்கு தனது வீட்டிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்த போது துணி ஒன்றை தனது முகத்தில் இடப்பட்டது மட்டுமே நினைவில் உண்டென மாணவன் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளான்.

நேற்று நண்பகல் ஒரு மணியளவில் நினைவு திரும்பிய மாணவன் அமைதியாக இருந்துள்ளான்.
கடத்தல் காரர்கள் தேனீர் அருந்தச் சென்ற போது வானில்  இருந்து தப்பி வந்து, தனது உறவினர்களுடன் தொலைபேசியில் கதைக்கும் வரை உறவினர்கள் எவருக்கும் இது பற்றித் தெரிந்திருக்கவில்லை.

இவ்வாறு மாணவன் தப்பிச் சென்ற இடம் ஹோமாகம எனத் தெரிய வந்ததையடுத்து மாணவன் ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளான். தற்போது, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--