Super User / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கம்பளை துனுகேஉல்ல பாதையில் அட்டபாகை சந்தியில் இருந்து துனுக்கேஉல்ல வரையான மூன்று கிலோ மீற்றர் தூரத்தை திருத்தி தருமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையொன்றை குறித்த பாதையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டி சாரதிகள் இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.
இப்பாதையில் இன்று காலை முதல் தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவில்லை. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களும் சேவையில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று நண்பகல் வரை சேவையில் ஈடுபட்ட முச்சக்கரவண்டிகள் நண்பகலுக்கு பின்னர் சேவையை நிறுத்திக் கொண்டன.
இப்பாதையில் இஹலகந்த எனும் இடத்தில் பாதையோரத்தில் ஏற்பட்டுள்ள பாரியளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago