2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர்களுக்கு சாரணர் கலைக்கூறு பயிற்சி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம்.தாஹீர்)

ஊவா மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்த தமிழ்மொழி மூலமான சாரண கலைக்கூறு ஒன்று பயிற்சிநெறி கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை பதுளை சௌதம் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்தப் பயிற்சிநெறியில் பதுளை மாவட்டத்தில் உள்ள தமிழ்மொழி மூலமான பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் 45 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  

இதன் மூலம் பதுளை மாவட்டத்தில் தமிழ் மொழி பாடசாலைகளில் சாரணர் இயக்க செயற்பாடுகளை  முன்னெடுக்க எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இப்பயிற்சிநெறிக்கு கல்முனை, அக்கரைப்பற்று உதவி சாரணர் ஆணையாளரும் இலங்கை சாரணர் சங்கத்தின் பயிற்றுவிப்பாளருமான ஆ.ர்.ஆ.மன்சூர் தலைமை தாங்குகின்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--