2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மாத்தளை பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி இடமாற்றம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எஸ்.குவால்தீன்)

மாத்தளை பொலிஸ் நிலையக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியை மத்திய மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உடனடியாக அமுலாகும் வகையில் கடமையிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.

மாத்தளை கண்டலம் பிரதேச வனப் பகுதியில் இடம்பெற்று வரும் மரக்கடத்தல் தொடர்பாக விசாரணைகளுக்குச் சென்ற பொலிஸார், பொலிஸ்த் துறைக்கு அவதூறு ஏற்படும் வகையில் மதுபானம் அருந்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே மத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இதேவேளை,  இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் எட்டு கான்ஸ்டபிள்களையும் உடனடியாக வேறு பொலிஸ் நிலயங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--