2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

பாடசாலை மாணவர்களிடையே மோதல்;மூவர் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எம்.எஸ்.குவால்தீன்)
விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் மாணவன் ஒருவன் பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி ஹசலக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.

இம்மோதல் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை கண்டியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்விப் பயிலும் மாணவர் குழுக்களே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில்  மூன்று மாணவர்களை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .