2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

தீவிபத்தில் மனைவியும் கணவரும் பலி

Kogilavani   / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம்.தாஹிர்)


பதுளை ஊவா பரணகம பிரதேசத்தின் வீடொன்றில் பெண்ணொருவர் அடுப்பு மூட்டுவதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்றவைக்க முற்பட்ட போது அத்தீ பரவியதன் காரணமாக அப் பெண்ணும் அவரது கணவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு இன்று காலை உயிரிழந்துள்ளனர்.

ஊவா பரணகம துங்கொல்ல பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான வீ.காந்தி (வயது 30 )என்பவரும் அவரது கணவரான புஞ்சிரால (வயது 35) என்பவருமே உயிரிழந்தவர்கள் ஆவர்.

நேற்று இடம்பெற்ற இத்தீவிபத்தையடுத்து இவ்விருவரும் ஊவா பரணகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   இவ்விருவிரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலம் பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--