2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

பொகவந்தலாவை வைத்தியசாலையில் மருந்துக்குத் தட்டுப்பாடு:வைத்திய அதிகாரி மறுப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் முக்கிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுவாக விசர்நாய்க் கடிக்கு எதிரான ஊசிமருந்து உட்பட முக்கிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு காணப்படுவதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வியடம் தொடர்பில் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், வருடத்தில் காலாண்டு அடிப்படையிலேயே மருந்துப் பொருட்கள் விநியோகிக்கிப்படுகின்றன. இதன்படி காலாண்டு இறுதிப் பகுதியில் ஒரு சில மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். பின்னர் தட்டுப்பாடு நிறைவேற்றப்படும். இந்த நிலையில் ஒரு மாவட்ட வைத்தியசாலைக்குரிய மருந்துப் பொருட்களே சுகாதார அமைச்சினால் வழங்கப்படுகின்றதென்பதையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--