2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கம்பளையில் நடைபாதை கடைகள் அகற்றம்

Super User   / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                               (எம்.எம்.எம்.ரம்ஸீன்)

கம்பளை நகரில் உள்ள அனைத்து நடைபாதை கடைகளும் இன்று புதன்கிழமை பகல் கம்பளை பொலிஸாரால் அகற்றப்பட்டன.

கம்பளை நகரில் சன நடமாட்டம் நிறைந்த வீதிகளில் இருந்த நடைபாதை கடைகளே பொலிஸாரால் அகற்றப்பட்டன.

இந்நடவடிக்கையின் காரணமாக சுமார் 90 நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு தடையாக இருந்த சகல விளம்பர பலகைகளும் பொலிஸாரால் அகற்றப்பட்டன.

கம்பளை நகரில் அம்பகமுவ வீதி, நுவரெலியா வீதி, கண்டி வீதி, நாவலபிட்டிய வீதி மற்றும் மலபார் வீதி என்பவற்றில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--