Super User / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எஸ்.குவால்தீன்)
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த குழுவினருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பெளத்த பிக்கு ஒருவரை வத்துகாமம் பொலிஸார் இன்று பகல் கைது செய்துள்ளனர்.
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று வத்துகாமம் பொலிஸ் பிரதேசத்தில் பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உட்பட பலர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு பல்வேறு இடங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது பௌத்த பிக்கு ஒருவர் இக்குழுவினரின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்று வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், எதிர்வரும் 14ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகக் வேண்டும் என அறிவித்து அவரை வீடு செல்ல அனுமதித்தனர்.
8 minute ago
13 minute ago
23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
23 minute ago
36 minute ago