2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தொலைபேசிமூலம் பணமோசடியில் ஈடுபட்டவர்கள் கைது

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

விஷேட லொத்தர் ஒன்றின் மூலம் கார் ஒன்று வென்றுள்ளீர்கள் என்று தொலைபேசி மூலம் மக்களை ஏமாற்றியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்களை மாத்தளை கலேவெல பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

லொத்தர் ஒன்றின் மூலம் கார் ஒன்றை வென்றுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்வதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் தேவை எனவும் தொலைபேசி மூலம் இவர்கள் பொது மக்களை ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.  சந்தேகநபர்களிடம் இருந்து பல கையடக்க தொலைபேசிகளும் சிம் காடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை இவ்வாறான மோசடிகளுக்கு உள்ளானவர்கள் இருப்பின் பொலிஸுடன் தொடர்பு கொள்ளுமாரும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .