2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தலவாக்கலையில் ஆயுதங்களுடன் மூவர் கைது

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய  முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் சந்தேகநபர் ஒருவரையும் அவருடைய சகாக்கள் இருவரையும் மத்திய மாகாண பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினர் இன்று சனிக்கிழமை நுவரெலியா தலவாக்கலை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கண்டியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினரால் சில தினங்களுக்கு முன்பு தலவாக்கலை பிரதேசத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதன் தொடராகவே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு ரீ-56 ரக துப்பாக்கிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய மாகாண பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--