2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

தம்பியின் கிரிக்கெட் மட்டை தாக்குதலில் அண்ணன் பலி: மாத்தளையில் சம்பவம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.எம்.ரிஃபாத்)

அண்ணன், தம்பிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த தம்பி கிரிக்கெட் மட்டையால் தாக்கி அண்ணனை கொலை செய்த சம்பவமொன்று மகாவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லாவெல கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் மகாவெல மில்லாவெல என்ற கிராமத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், 35 வயதுடைய சமன் மகிந்த என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் தனிப்பட்ட காரணமொன்றினால் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது, அண்ணன் மீது ஆத்திரம் கொண்ட தம்பி வீட்டிலிருந்த தமது கிரிக்கெட் மட்டையால் அண்ணனை தாக்கியதை அடுத்து அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மகாவெல பொலிஸார், சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் தம்பியான டி.ஜி.குமார என்பரை கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .