Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மத்திய மாகாண பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் எல்.பாரதிதாசனை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கசேனனின் ஆலோசனைக் கேற்ப கண்டியிலுள்ள மத்திய மாகாண பயங்கரவாத தடுப்பு பிரிவுக்குச் சென்று சந்தித்துப் பேசியதாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:
"ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் எல்.பாரதிதாசனிடம் தற்போது சுமுகமான விசாரணைகள் இடம் பெறுவதாகவும் உரிய விசாரணைக்குப் பிறகு அவர் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மத்திய மாகாண பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் யட்டவல என்னிடம் தெரிவித்தார்.
அத்துடன் பாராதிதாசனின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக வெளியாகிய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் என்னிடம் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பாரதிதாசனின் குடும்பதத்தாரும் இன்று ஞாயிற்றுக்கிழமை அவரைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
33 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago