2025 ஜூலை 12, சனிக்கிழமை

வீதி விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கட்டுகஸ்தோட்டை மெதவலை வீதியில் தனியார் பஸ் வண்டி ஒன்றில் மோதி ஒன்றரை வயது குழந்தையொன்று ஸ்தலத்திலே பலியாகியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 2 30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்த சிறுமி கட்டுகஸ்தோட்டை உடுவாவல என்னுமிடத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஹஷினி மதூஷிகா பீரிஸ் என்பவராவார்.

 

இவ்விபத்து சம்பந்தமான மரண விசாரணை கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கனாயக்காவினால் இன்று மாலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சுஜீவ குனதிலக தலமையில் விசாரணைகள் நடைபெறுகின்றன.



 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .