2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பாரதிதாசன் கைது தொடர்பாக மத்திய மாகாண முதலமைச்சர், ஆளுநரிடம் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி,எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கப் பிரிவுச் செயலாளர் எல்.பாரதிதாசன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக மத்திய மாகாணசபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்திய மாகாணசபை ஆளுநர் டிக்ரி கொப்பேக்கடுவ ஆகியோரிடம் நேற்று முறைப்பாடு செய்துள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதன் இன்று தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இந்நிலையில், கண்டி பயங்கரவாதத் தடுப்பு அலுவலகத்துடன் தொடர்புகொண்டு எல்.பாரதிதாசனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மத்திய மாகாணசபை முதலமைச்சர், ஆளுநர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், எல்.பாரதிதாசனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுக்கத் தவறும் பட்சத்தில் எல்.பாரதிதாசனின் விடுதலைக்காக  பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு தான் கொண்டு செல்லவுள்ளதாகவும் முரளி ரகுநாதன் தெரிவித்தார்.

எல்.பாரதிதாசனைவிடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கூட்டமொன்று தற்போது  ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தலைமையில் தலவாக்கலை பிரதிநிதிகளுடன் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .