2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கஞ்சா போதைப் பொருள் விநியோகம் செய்தவர்கள் கைது

Kogilavani   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆஸிக்)

கண்டி பிரதேசத்துக்கு பெரிய அலவில் கஞ்சா போதை பொருளை விநியோகம் செய்து வந்த நான்கு சந்தேக நபர்களை,  20 கிலோ கிராம் கஞ்சாவுடன் அலவத்துகொடை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இரண்டு தினங்களுக்கு முன் அலவத்துகொடை பிரதேசத்தில் 75 பக்கட் கஞ்சாவுடன் கைது செய்த நபரை விசாரனைக்குட்படுத்தியபோது கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் ஒரு கிலோ கிராம் கஞ்சாவுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேற்படி நபரை விசாரணைக்குட்படுத்தியப்போது கிடைத்த தகவலின் பிரகாரம் கண்டி குட்ஷைட் பஸ் தரிப்பிடத்தில் வைத்து மற்றுமொரு சந்தேக நபரை இரண்டு கிலோ கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பதுளை கொஸ்லன்த எலபாத்த பிரதேசத்தில் வீடு ஒன்றை சோதனையிட்ட பொலிஸார் அங்கு பதுக்கி வைத்திருந்த 16 கிலோ 250 கிராம் கஞ்சாவையும,  சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர்.

மத்திய மாகாணத்துக்கு பொருப்பான பிரதி பொலிஸ்  மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலமையில் மேலதிக விசாரணைகள்  நடை பெற்றுவருகின்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--