2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பபகொல்லையிலிருந்து சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நதீர் சரீப்தீன்)

பலாங்கொடை, பபகொல்லை பிரதேசத்தின் நீரோடையில் அருகிலிருந்து சடலமொன்றினை மீட்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சடலத்துக்குரியவர் 35 வயதான நிமல் சாந்த என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பபகொல்லை பிரதேசத்தில் தபாற்காரராக சேவையாற்றி வந்த இவர் கடந்த 26ஆம் திகதி திருமண வீடொன்றுக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--