Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.எம்.ரிஃபாத்)
மாத்தளை மாவட்ட பிரதான வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவு நேற்று புதன்கிழமை மாலை திடீரென மூடப்பட்டதால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த 12 மன நோயாளர்கள் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையின் மனநோயாளர் பிரிவில் கடமையாற்றிய தாதி உத்தியோகத்தர்கள் திடீரென வேறு பிரிவுகளுக்கு மாறிச் சென்றதை அடுத்தே மன நோயாளர் பிரிவு திடீரென மூடப்பட்டது.
அந்தப் பிரிவில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்களுக்கு உரிய வகையில் வைத்தியசாலை நிர்வாகம் சலுகைகளை வழங்குவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே அந்த பிரிவில் கடமையாற்ற மறுப்பு தெரிவித்து வேறு பிரிவுகளுக்கு சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2 minute ago
12 minute ago
15 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
15 minute ago
20 minute ago