2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ஆசிரியர் நியமனங்களின் போது சப்ரகமுவ இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை

Kogilavani   / 2010 நவம்பர் 01 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஆர்.ராவின்)

சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்களின் போது வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் ஏ.எம்.எம் இஸ்மத் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது

மாகாணத்தில் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரயர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் குறிப்பிட்டளவு ஆசிரியர்கள் வெளிமாகாணங்களை சேர்ந்தவர்களாவர். இவர்கள் நியமனத்தை பெற்ற குறுகியகாலத்தில் அரசியல்வாதிகளின் தலையீட்டுடன்,  தமது சொந்த மாகாணத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுவிடுகின்றனர். இதனால் மீண்டும் சப்ரகமுவ பாடசாலைகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகின்றது.

குறிப்பாக தமிழ் , முஸ்லிம் பாடசாலைகளில்தான் பாரிய ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்படுகின்றன.

இதனை தவிர்க்கும் பொருட்டு, இனிவரும் காலங்களில் சப்ரகமுவ மாகாணத்தை சேர்ந்த இளைஞன் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

இதுக்குறித்து மாகாண முதலமைச்சர் மகீபால ஹேரத்துடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .