2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

திருமண வைபவத்தில் போதையில் விழுந்து மரணம்;ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 01 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம் தாஹிர்)

பசறை மடுல்சீமையில் நடைபெற்ற திருமண வைபவமொன்றின்போது, நபரொருவர் மதுபோதையிலிருந்தவாறு கீழே விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் சந்தேக நபரொருவரை மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பசறை மடுல்சீமையில் நடைபெற்ற திருமண வைபவமொன்றின்போது 45 வயதான நபரொருவர் மதுபோதையிலிருந்தவாறு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இம்மரணம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனைகளின்போது குறித்த நபர் தாக்குதலுக்கு உட்பட்ட நிலையில் காயங்கள் இருந்ததாக விசாரணைகள் தெரிவித்தன. அதற்கமைய அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--