2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மகாநாயக்க தேரருடன் சந்திப்பு

Super User   / 2010 நவம்பர் 06 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பல்கலைகழகங்களில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகளைப் பற்றி விளக்குவதற்காக அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தூதுக்குழுவொன்று இன்று சனிக்கிழமை கண்டி மல்வத்த பீடத்தின் மகாநாயக்க வண.திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தது.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் பதில் இனைப்பாளர் சஞ்ஜீவ பண்டார தலைமையிலான குழுவினரே மகாநாயக்க தேரரை சந்தித்தனர்.

தற்போது பல்கலைகழகங்களில் ஏற்பட்டுள்ள நிலமைகளைப் பற்றியும் பல்கலைகழக மாணவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது சம்பந்தமாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் பதில் இணைப்பாளர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்தார்.
 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .