2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கண்டியில் பாதைகள் செப்பனிடப்படாததால் மக்கள் அசௌகரியம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 12 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்டத்தில் குண்டகசாலை  பிரதேச சபைக்குட்பட்ட பல பாதைகள் செப்பனிடப்படாமலும் திருத்தப்படாமலும் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குண்டகசாலை தொகுதியில் முக்கிய குடியிருப்புக்கள் மற்றும் குண்டகசாலை விவசாயப் பாடசாலை, குண்டகசாலை விவசாயப் பண்ணை, கரந்தகொல்ல பண்ணை முதலான பல முக்கிய இடங்களுக்குச் செல்லும் பாதை பழுதடைந்த நிலையிலுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் இப்பாதையை திருத்தித் தரவேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தபோதிலும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--