2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பெண் விரிவுரையாளரை கத்தியால் குத்த முயற்சி; பல்கலை மாணவன் காயம்

Super User   / 2010 நவம்பர் 14 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பேராதனை பல்கலைகழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவரை கத்தியால் குத்துவதற்கு முற்பட்ட இனம் தெரியாத நபர் ஒருவரை தடுக்க முயற்சி செய்த  மிருக வைத்திய பிரிவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கத்தி வெட்டுக்குள்ளாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பேராதனை பல்கலைகழக வளாகத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் பெண் விரிவுரையாளர் மீது கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை அவதானித்த மிருக வைத்தியத்துறையை சேர்ந்த குறிப்பிட்ட மாணவர் அதனை தடுக்க முயற்சி செய்துள்ளார். அதன்போதே அவர் கத்தி வெட்டுக்குள்ளாகியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  பேராதனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--