2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

வயோதிப பெண் மர்ம மரணம்

Super User   / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாகலை பிரதேசத்தில் தனிமையில் வாழ்ந்து வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்கருகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று 16ஆம் திகதி மாலை 1 மணியளவில் நாவலப்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை தொடர்ந்து வருகைத்தந்த பொலிஸார் வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டின் சமையலறை பகுதியில் பெண் ஒருவர் தீயினால்  உடற்கருகி உயிரிழந்துள்ளமையை கண்டனர்.

இதனைத்தொடர்ந்து நாவலப்பிட்டி நீதிமன்றின் பதில் நீதிவான் நியானந்த மஹிந்தானந்த விசாரணைகளை மேற்கொண்டார்.

அதன் பின்னார் கண்டியிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. எனினும் சந்தேகத்திற்கிடமான தகவலொன்றும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்தப்பெண் வாழ்ந்து வந்த வீட்டை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இம்மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .