2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பொதுநோக்கத்தின் அடிப்படையில் பன்முகப்படுத்தப்பட்ட நிதி பயன்படுத்தப்பட வேண்டும் - உதயகுமார்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து  அபிவிருத்திட்டங்களுக்காக பெறப்படுகின்ற பொருட்கள் பொதுநோக்கத்தின் அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

அத்தோடு அவற்றினைப் பாதுகாப்பதிலும் பயனாளிகள் அக்கறை செலுத்த வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப பெற்றுக்கொடுக்கப்படுகின்ற இந்தப்பொருடகள் மக்களுக்குரியதாகும்.

இந்த நிலையில் மத்திய மாகாணசபை முதலமைச்சரின் ஒத்துழைப்புடன் நுவரெலியா மாவட்டத்தில் தோட்டக்குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டமொன்றினையும் முன்னெடுத்து வருகின்றேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொத்மலைப்பிரதேச தோட்டப்பகுதிகளின் அபிவிருத்தித்திட்டங்களுக்காக பெறப்பட்ட பொருட்களை கொத்மலை பிரதேச சபை மண்டபத்தில் பயனாளிகளுக்கு வழங்கி வைத்து பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதன் போது பூண்டுலோயா பிரதேச பாடசாலைகளிலிருந்து இவ்வருடம் ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து பெறப்பட்ட பரிசில்களையும் பதக்கங்களையும் வழங்கி மாணவர்களைப்பாராட்டினார்.

இந்த நிகழ்வில் கொத்மலைப்பிரதேச சபை உறுப்பினர்களான அந்தனிராஜ், சிவகுமார் உட்பட
தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொத்மலை, பூண்டுலொயா பிரதேச முக்கியஸ்தர்கள் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--