Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
சிவனொளி பாத மலைக்கான யாத்திரை பருவகாலம் இன்று 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. இந்த யாத்திரைப் பருவ காலத்தினை ஆரம்பித்து வைக்கும் முகமாக நேற்று 19ஆம் திகதி இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்வெல ஸ்ரீபாத ரஜமஹா விகாரையிலிருந்து எடுத்துவரப்பட்ட சமன் தெய்வத்தின் விக்கிரகமும் பூஜை பொருட்களும் அலங்கரிகப்பட்ட இரதபவனியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பவனியானது பெல்மதுளை, இரத்தினபுரி, அவிசாவளை, கரவனெல்ல, கிதுல்கலை, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலைக்கு வருகை தந்தது.
இதேவேளை இந்த இரத பவனியை கலுகல பிரதேசத்திலுள்ள மத்திய மாகாணசபையின் எல்லையில் வைத்து வரவேற்பதற்கு கால்நடை கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம்,சப்பிரகமுவ மாகாண ஆளுநர் வி.ஜே.மு.லொக்குபண்டார ஆகியோர் விசேட வழிபாடுகளை ஒழுங்கு செய்திருந்தனர்.
சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் இன்று 20ஆம் திகதி அதிகாலை சிவனொளிபாதமலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதன் பின்பு இடம்பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து இவ்வருடத்திற்கான சினொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம் ஆரம்பமாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago