2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

கொட்டகலை நகரில் தீவிபத்து

Super User   / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கொகட்டகலை நகரில் இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைத்தொகுதிகளுடன் ஒரு வீடும் தீக்கிரையாகியுள்ளன.

கொட்டகலை நகரிலுள்ள நுவரெலியா பிரதேச சபைக்கு முன்னாலுள்ள வர்த்தக நிலைய கட்டிடத்திலேயே தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது தொலைத்தொடர்பு நிலையமொன்றும் மின் உபகரணங்கள் திருத்தும் நிலையமொன்றும் இந்த கடைகளின் மேல் மாடியிலுள்ள வீடுடொன்றும் முற்றாக எரிந்து சாம்பளாகியுள்ளன.

பத்தனை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தச்சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகைளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .