2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் நகரின் பிரதான பஸ்தரிப்பு பகுதிக்கு அருகிலுள்ள சமனலகம கிராமத்தில் ஹெரோயின்  போதைப்பொருளை வைத்திருந்த மூன்று பேரை கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 150 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய 14 சிறுபொதிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தன் போது இவர்கள் தொலைபேசி ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்தப்போதைப் பொருளினைக் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கைத்தொலைபேசியின் பெற்றரி வைக்கும் பகுதியிலேயே ஹெரோயின் போதைப்பொருளின் சிறுபொதிகளை மறைத்து வைத்து நகரப்பகுதிக்கு வந்து போதைப்பொருளினை விற்பனை செய்து வந்துள்ளனர்.
 
இவர்களை ஹட்டன் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் ஒருவர் கொழும்பு கிரண்டபாஸைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய இருவரும் ஹட்டனைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--