Suganthini Ratnam / 2011 ஜனவரி 10 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி பிலிமதலாவை பிரதேசத்தில் 63 வயதுடைய பெண்ணின் சடலம்; வைக்கப்பட்ட பெட்டியில் குழந்தையொன்றின் சடலத்தையும் சேர்த்து தகனம் செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சி பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
கண்டி பிலிமதலாவை அரம்பேகொடை மயானத்தில் தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலத்துடன் குழந்தையொன்றின் சடலமும் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இது முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில், கடுகண்ணாவை பொலிஸார் கண்டி பதில் நீதவான் உபாலி பொகஹபிட்டியவை அழைத்து விசாரணை நடத்தினர். இரு சடலங்களையும் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை நடத்துமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
07 Mar 2026