2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ஒரே பெட்டியில் இரு சடலங்களை தகனம் செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பில் மலர்ச்சாலை உரிமையாளர் கைது

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 11 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி பிலிமதலாவை பிரதேசத்தில் பெண்ணொருவரது சடலத்துடன் குழந்தையொன்றினது சடலத்தையும் ஒரு பெட்டியில் வைத்து  தகனம் செய்ய முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில்  கண்ணொருவ பிரதேசத்தை சேர்ந்த மலர்ச்சாலை உரிமையாளரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கநாயக்க நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் பிலிமதலாவை அரம்பேகொடை பிரதேச மயானத்தில்; 63 வயதுடை பெண்ணினது சடலத்துடன் குழந்தையொன்றினது சடலத்தையும் ஒரு பெட்டியில் வைத்து தகனம் செய்ய முற்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அது முறியடிக்கப்பட்டது.

இதனையடுத்து, விசாரணை நடத்திய பொலிஸார், சந்தேகத்தின் பேரில் கண்ணொருவை பிரதேசத்தை சேர்ந்த மலர்ச்சாலை உரிமையாளரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையிலேயே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .