2025 ஜூலை 12, சனிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Menaka Mookandi   / 2011 ஜனவரி 12 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி - மாத்தளை வீதியில் நேற்று இரவு 8.00 மணி அளவில்  இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றின் போது ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் சிறு காயங்களுக்குள்ளாகிவுள்ளனர்.

கண்டியிலிருந்து அநுராதபுரம் வரை சென்று கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று அம்பதென்னை பிரதேசத்தில் வைத்து லொரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டது.

விபத்து சம்பந்தமாக பஸ் வண்டியின் சாரதியை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இன்று மாலை கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர்செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .